செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (14:57 IST)

டாஸ்மாக் மூடலில் தனி வசூல்; முறைகேடாக மது விற்பனை! – 4 பேர் கைது!

தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ரகசியமாக மது விற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினமே ம்துப்பிரியர்கள் மதுவை வாங்கி குவித்தனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் சிலர் மதுபானங்களை ரகசியமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக அப்பகுதி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அப்பகுதிகளில் போலீஸார் சோதனை செய்தபோது ரகசியமாக மது விற்க முயன்ற 4 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்த 240 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.