1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (11:48 IST)

தமிழகத்தின் உரிமையை பிடுங்கி எறிவதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தை நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள நீர்நிலைகளை மேலாண்மை செய்யும் அடிப்படையில் மத்திய அரசு நீர்வளத்துறை திருத்த விதிகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி மாநில வாரியான மேலாண்மை ஆணையங்கள் நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு ஆணையங்கள் செயல்பட வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”காவிரி மேலாண்மை வாரியத்தை நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வருவது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் செயல். காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.