1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (08:27 IST)

அதிமுக கோட்டையில் ஓட்டை... வெளுத்து வாங்கும் ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டதாக ஸ்டாலின் விமர்சனம். 

 
"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பரப்புரை வாயிலாக, தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனது சமீபத்திய பரப்புரையின் போது பின்வருமாறு பேசினார்... 
 
வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் எனவும் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை அழ குழிதோண்டி புதைப்போம் எனவும் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டதாக விமர்சித்த ஸ்டாலின், கருணாநிதி மறைந்த போது அவரை அடக்கம் செய்ய 6 அடி இடம் கொடுக்காத இந்த ஆட்சியாளர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.