தொடர்புடைய செய்திகள்
- சாலையோர கடையில் டீ குடித்த எடப்பாடியார்! – வைரலாகும் புகைப்படம்!
- கமல்ஹாசன் பரிந்துரை புத்தகங்கள் விற்பனை! – சென்னை புத்தக விழா தேதி அறிவிப்பு!
- முகநூலில் காதல்.. ஆபாச படத்தை வைத்து மிரட்டல்! – மோசடி வாலிபர் கைது!
- ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
- அமமுகவை வலுப்படுத்த டிடிவி முயற்சிக்கட்டும் - அதிமுக அமைச்சர் நக்கல்!
சசிக்கலா அணிக்கு ஓபிஎஸ் வரலாம்! எடப்பாடியாருக்கு கெட் அவுட்?! – கொக்கி போடும் டிடிவி!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிக்கலா அணியில் இணைய ஓபிஎஸ்க்கு டிடிவி மறைமுக அழைப்பு விடுப்பது போல பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிக்கலா விடுதலை அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார்போல் விடுதலையானதுமே அதிமுகவை மீட்பதே லட்சியம் என்று சசிக்கலாவும் பேசியிருந்தார்.
ஆனால் தற்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அமமுகவின் வியூகம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து பேசியுள்ள டிடிவி தினகரன் அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும், தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிமுகவை மீட்பது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சசிக்கலா அணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரும்பினால் வரலாம் என்ற மறைமுக அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் இளையமகன் சசிக்கலா உடல்நலம் குறித்த நலம் விசாரிப்பு அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சசிக்கலா விடுதலை குறித்து ஓ.பன்னீர்செல்வம் காரசாரமான கருத்துகளை முன்வைக்காமல் இருப்பதுமே அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுத்துக் கொள்ள படுகிறது.
அடுத்த கட்டுரையில்
