குறைதீர் திட்டம் மூலம் 60 ஆயிரம் மனுக்கள் - முதல்வர்
1100 முதலமைச்சரின் குறைதீர் திட்டம் மூலம் 60 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது என முதலமைச்சர் தகவல்.
முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் மூலம் இதுவரை 60 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சரின் குறை தீர்ப்பு திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவதாக ஸ்டாலின் கூறுவதை மறுத்தார்.
இத்திட்டத்தை கடந்த ஆண்டு சட்ட பேரவையில் 110விதியின் கீழ் தான் அறிவிப்பு வெளியிட்டதாக கூறினார். முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் இதுவரை 60 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.