திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 மே 2021 (14:26 IST)

ஸ்டாலின் பதவியேற்பு விழா; அழைப்பிதழ் இருந்தால் அனுமதி! – எளிய முறையில் ஏற்பாடு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இதற்காக அமைச்சரவை பட்டியலை தயாரித்து இன்று ஆளுனரிடம் ஒப்படைத்த அவர் பதவியேற்க உரிமை கோரினார். இந்நிலையில் நாளை மறுநாள் 7ம் தேதி காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் மற்ற அமைச்சர்களும் தொடர்ந்து பதவியேற்க உள்ளனர். கொரோனா காரணமாக குறைவான நபர்களுடன் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவுக்காக அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் நிலையில் ஒரு அழைப்பிதழுக்கு ஒருவர் என்ற ரீதியில் மட்டுமே பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.