செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (13:53 IST)

தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ஆட்சி அமைக்க இன்று காலை ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஆட்சி அமைக்க திமுகவுக்கு ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்
 
மேலும் ஆட்சி அமைக்க அழைப்பு கொடுப்பதற்கான கடிதத்தை ஆளுநரின் செயலாளர் அனந்தராவ் படேல் அவர்கள் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இதனை அடுத்து முக ஸ்டாலின் விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.