வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:37 IST)

ஆதாரம் இருந்தால் சொல்லுங்க... செல்லூராருக்கு செக் வைத்த ஸ்டாலின்!

மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து விட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை முக ஸ்டாலின் தகவல். 
 
மதுரை மாவட்டம் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் `கலைஞர் நினைவு நூலகம்' ஒன்றைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 70 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது. 
 
இந்நிலையில், மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து விட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று செல்லூர் ராஜுவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.