மாவலி மன்னரை வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளே - முதல்வரின் ஓணம் வாழ்த்து!
உலகம் முழுக்க உள்ள கேரளா மக்களால் இன்று ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் இந்நன்னாள் கொண்டப்படுகிறது.
கேரள ட்ரடிஷனல் உடை உடுத்தி அத்தப்பூ கோலமிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து பதிவை இட்டுள்ளார். அதில், அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள்! மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்! என கூறி #ஓணம்ஆசம்சைகள் என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்