செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:03 IST)

விலை குறைப்பால் பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பால் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டிய நிலையில் கடந்த 13ம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அன்றைய தினம் நள்ளிரவே அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த விலை குறைப்பின் தாக்கம் குறித்து இன்று சட்டசபையில் விளக்கமளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட பின்பு ஆகஸ்டு 14 முதல் 17ம் தேதிக்கு சுமார் 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. விலை குறைப்பு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது” என கூறியுள்ளார்.