செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:56 IST)

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பயோமெட்ரிக் பதிவை புதுப்பிக்க வேண்டும் - ஆதார் ஆணையம்!

ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணையுங்கள்: தேர்தல் ஆணையம் பரிந்துரை
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தங்கள் பயோ மெட்றிக் பதிவையும், தனித்தகவலையும், புதுக்கவேண்டுமென ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.  பிரதமர் மோடி பதவியேற்றபின்,  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது.

இதன் மூலம், மக்கள் தங்களுக்குத் தேவையான சலுகைகள்,  தகவல்கள், எல்லாம் உரிய நபர்களுக்குச் சென்றடைகிறது.

இந்த நிலையில், ஆதார் ஆணையம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,  
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தங்கள் பயோ மெற்றிக் பதிவையும், தனித்தகவலையும், புதுக்கவேண்டுமென ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

 5 வயது வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், ஆதாரில் தங்கள் பதிவைப் புதுக்க்பிக்கக வேண்டும். நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு மையங்கள் 1.5 லட்சம் அஞ்சல்காரர்கள் மூலம் முகவரியகள் அனைத்தும் புதுப்பிக்கப்படுகிறது. 70 வயதிற்க்கு மேல் ஆதாரை புதுப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.