1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin announce jotrnalists are frontline workers

பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Tamilnadu
தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் முன்கள பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களுக்கு அவசர காலங்களில் உதவியாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக அடையாளப்படுத்தபடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா? மழுப்பலான பதில் சொல்லி எஸ்கேப்!