மும்பையில் 40 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

corono virus
Sinoj| Last Modified திங்கள், 3 மே 2021 (23:44 IST)

மும்பையில் இன்று கொரோனாவால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 48,621 பேருக்குக் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல்,
கடந்த 24 மணிநேரத்தில்
567 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,851 ஆக அதிகரித்துள்ளது. இன்று 59,500 பேர்கொரோனாவிலிருந்து
குணமடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 40,41,158 பேர் குணமடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :