செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (14:59 IST)

சட்டமன்ற கூட்டத்தொடர் இனி நேரலை ஒளிபரப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விவாதங்கள் இனி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பில் திமுக தெரிவித்திருந்தபடி சட்டமன்ற விவாதங்களை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என அரசியல் கட்சிகள் பல கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்ற நிகழ்வுகள், விவாதங்களை கலைவாணர் அரங்கிலிருந்து சில காரணங்களால் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. ஜார்ஜ் கோட்டையில் நடக்கும் கூட்டத்தொடர் அனைவரும் காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.