வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (10:34 IST)

தலைமை செயலகம் அருகே மணல் திருட்டு; அரசு உறங்குகிறதா? – கமல்ஹாசன் கேள்வி!

சென்னை கூவம் ஆற்றில் மணல் திருட்டு நடந்து வருவதை அரசு கவனிக்க தவறிவிட்டதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ”சென்னை தலைமை செயலகத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கூவம் ஆற்றில் மணல் திருட்டு நடந்து வருகிறது. அவ்வளவு முக்கியமான போக்குவரத்து சாலையில், காவலர்கள் பணியில் இருக்கும்போதே இது நடைபெறுகிறது. குறைந்தபட்சமாக கணக்கிட்டால் கூட இதனால் ஆண்டிற்கு அரசுக்கு 11 கோடி இழப்பீடு ஏற்படும்” என கூறியுள்ளார்.

மேலும் இந்த மணல் வீடுகட்ட ஏற்றது அல்ல என்பதால் இதனால் கட்டப்படும் கட்டிடங்களின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ள கமல்ஹாசன் இப்படி மணல் தொடர்ந்து அள்ளப்படுவதால் கூவம் – கடற்கரையில் கடக்கும் பகுதியில் சுற்றுசூழல் பாதிப்புகள் உருவாகலாம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.