கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி தீவிரம்! – மருத்துவ ஆலோசனை குழுவில் முடிவு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த மருத்துவகுழு கலந்தாலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஏதேனும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தால் விதிமுறைகளுக்கு உட்பட்டு மார்ச் 30க்குள் அவற்றை முடிக்க வேண்டும்.
அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் 100 சதவீதம் பணியாளர்களுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
பேருந்து மற்றும் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா அதிகமாக பரவும் மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.