புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (21:22 IST)

முதல்வரை விடுவதாக இல்லை; ஒண்டிக்கு ஒண்டி பார்த்துவிடுவோம்: முக ஸ்டாலின் ஆவேசம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக வேட்பாளருக்கும், திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இருவரும் பிரச்சார மேடைகளில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். முதல்வர் ஈபிஎஸ் முதல்வரானது விபத்து என்று முக ஸ்டாலினும், ஸ்டாலின் திமுக தலைவரானது விபத்து என்றும் மாறி மாறி ஆவேசமாக பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் பேசியதற்கெல்லாம் நான் பதில் சொல்லிவிட்டேன் என்றும், இன்று நாங்குநேரியில் பேசியதற்கு நாளை அங்கு சென்று பதில் சொல்வேன் என்றும், அவரை விடுவதாக இல்லை என்றும் ஒண்டிக்கு ஒண்டி பார்த்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது