புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:37 IST)

இதற்கு மட்டும் இவ்வளவு வேகமாக செயல்படுகிறார்கள்! – மு.க.ஸ்டாலின் காட்டம்

மாமல்லபுரத்தை சுத்தம் செய்ய இவ்வளவு வேகம் காட்டிய அரசு மக்களின் தேவையை நிறைவேற்றவில்லை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் சுற்றுபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பேசிய அவர் “பிரதமர் வருகையையொட்டி ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சுத்தம் செய்த அதிமுக அரசு, 8 ஆண்டுகளாகியும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி அமைத்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.