செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (08:19 IST)

ஸ்டாலின் திமுக தலைவரானதே ஒரு விபத்து தான்: எடப்பாடி பழனிச்சாமி

இம்மாதம் 21ஆம் தேதி விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியின் தலைவர்களும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘தான் முதலமைச்சரானது விபத்து எனக் கூறிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும், தங்களை விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் கூறிய முதல்வர் உண்மையில் முக ஸ்டாலின் திமுக தலைவரானதுதான் விபத்து என்றும் பதிலடி கொடுத்தார்.
 
மேலும் அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்துவிட்டு திமுக தலைவர் மக்களுக்கு நல்லது செய்வது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவரால் அடுத்த முறை எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.
 
முன்னதாக விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘ தமிழகத்தில் ஊழல் வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டது. பொள்ளாச்சி என்ற பெயரை கூறவே பலர் கூச்சப்படுகின்றனர் என்று தெரிவித்தார். மேலும் அவர் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திண்ணைப்பிரச்சாரமும் செய்தார்