செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (16:51 IST)

பாஜகவில் இணையவுள்ள மு.க.அழகிரி...? .இணையதளத்தில் பரவும் தகவல்

முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி மறைவுக்குப் பின் அவரது மகன் முக. அழகிரி இன்னும்  திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை..

மு. க. அழகிரி இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காததால் அவரது குடும்பம் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு பாஜக கட்சியின் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாகவும் இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும்   இதற்கு அழகிரி மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் பரவலாகி வருகிறது.

.முக அழகிரிக்கு மதுரையில் செல்வாக்கு உள்ளதால் தற்போது திமுக மீது அதிருப்தியில் உள்ளதால் அடுத்து வரவுள்ள தேர்தலில் அவரது ஆதரவாளர்களின் ஓட்டுகளாகவும் மாற வாய்ப்புள்ளதால் பாஜக இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.