தேவர் பூஜை விபூதியை கீழே கொட்டிய ஸ்டாலின்! – ட்ரெண்டான #தேவரை_அவமதித்த_ஸ்டாலின்
தேவர் ஜெயந்திக்கு ராமநாதபுரம் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு அளிக்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அவருக்கு விபூதி அளிக்கப்பட்டது. அதை நெற்றியில் பூசாமல் பெயரளவில் கழுத்தில் தடவிக் கொண்ட அவர், மீத விபூதியை கீழே கொட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் சென்றபோது #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதை தொடர்ந்து தற்போது விபூதியை கீழே கொட்டி அவமதித்து விட்டதாக #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு ஸ்டாலின் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.