செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (13:43 IST)

அன்னைக்கு #GoBackModi போட்டீங்கள்ல.. உங்களுக்கு நல்லா வேணும்! – ஸ்டாலினை பங்கம் பண்ணும் எச்.ராஜா!

தேவர் ஜெயந்திக்கு ராமநாதபுரம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin ட்ரெண்டான நிலையில் இதுகுறித்து எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

இன்று தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலின் தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரம் வருவதையொட்டி அவரை வரவேற்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இது வைரலான நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள எச்.ராஜா “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். என்பதுபோல சொந்த மாநிலத்திலேயே #GobackStalin அகில இந்திய அளவில் #Trending ஆகிக்கொண்டிருக்கிறது. இதுதான் கர்மா!” என கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி தமிழகம் வரும் சமயங்களில் திமுகவினர் #GoBackModi என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.