1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Alagiri calls his supporters on Jan 3rd

அலைகடலென திறண்டு வாரீர்... முக அழகிரி அழைப்பு!

MK Azhagiri
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ல் மதுரை வர வேண்டும் என மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் திமுகவிலிருந்து விலகிய மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கபோவாதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதுகுறித்து மு.க.அழகிரி எதுவும் பேசாமலே இருந்து வந்தார்.
 
இந்நிலையில் தற்போது மதுரையில் ஆதரவாளர்களோடு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர் “ஜனவரி 3ம் தேதி எனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்த உள்ளேன். ஆலோசனைக்கு பிறகு கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” என கூறினார். 
 
தற்போது, தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ல் மதுரை வர வேண்டும். வருங்கால அரசியல் நடவடிக்கை பற்றி ஆதரவாளர்களுடன் ஜன.3ல் ஆலோசனை நடத்துகிறேன். ஜன.3ல் பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை என தனது ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?