செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (13:43 IST)

ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகியுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அந்த படப்பிடிப்பின்போது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் அவர் அங்கு உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ’ரஜினிகாந்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரத்த அழுத்த மாறுபாடு செய்யப்பட்டதும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவித்துள்ளது
 
ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது