1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (12:44 IST)

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி - சர்தார் வல்லபாய் படேல் சிலையில் தமிழாக்கம்

குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையில் தமிழை தவறாக எழுதியுள்ள விவகாரம் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேரில் சென்று இன்று அந்த சிலையை திறந்து வைத்தார்.
 
சுதந்திரம் பெற்ற பின் இந்திய தேசத்தை ஒருங்கிணைத்ததில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பெரும் பங்குண்டு என்பதை குறிக்கும் வைகையில் இந்த சிலையின் அடிப்பாகத்தில், ஒற்றுமையின் சிலை என்கிற வார்த்தை மொத்தம் 10 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

 
இதில், தமிழுக்கான இடத்தில் ‘ ஒற்றுமையின் சிலை’ என்பதற்கு பதிலாக  ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என எழுதப்பட்டுள்ளது. இது தமிழ் ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழை தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது மாற்றப்பட வேண்டும் என ஒருபக்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மறுபக்கம், இதை கிண்டலடித்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த தவறை சரி செய்யும் முயற்சியில் தமிழக பாஜகவினர் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.