செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (16:37 IST)

கதை என்னோடதுதான் - படம் போட்டு காட்டிய முருகதாஸ்

விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் எனவும், படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயரை போடுவதற்கு முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, முருகதாஸ் கதையை திருடி எடுத்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பதிவுகளும், மீம்ஸ்களும் பரவி வருகிறது. 

 
ஆனால், டைட்டில்லாம் பேருலாம் போடமாட்டோம். என் கதையை போலவே அவரும் கதையை வைத்திருந்தால், அவருக்கு மரியாதை செய்வோம். இரு கதையிலும் கரு ஒன்றே தவிர, சர்காருக்கும், செங்கோலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் முருகதாஸ்தான் என முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
 
தற்போது அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில்  கதை, திரைக்கதை முருகாதஸ் என அச்சிடப்பட்டுள்ள போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்.