ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 6 ஜூலை 2024 (17:03 IST)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதன் ஒரு பகுதியாக மதுரை அருகே உள்ள மேலூர் அரசு கலைக் கல்லூரியில், ஏ.ஐ.எஸ்.எஃப் அமைப்பு மாணவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் ராஷித் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
இதில், மாநிலக் குழு உறுப்பினர் சேதுபாண்டி மற்றும் சதிஷ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
 
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் மதுமிதா, கல்லூரி நிர்வாகிகள் கிஷோர், பிரவீன், பிரதாப் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வகுப்பை புறக்கணித்தனர்.
 
இதில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.