1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:04 IST)

சுடுகாட்ட காணும்… அங்க போக வழியையும் காணும்!

செங்கம் அருகே காணாமல் போன மயான பாதை மற்றும் சுடுகாட்டை கண்டுபிடித்து தர பொதுமக்கள் கோரிக்கை.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த எறையூர் பகுதியில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த  சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட  நாயுடு இனத்தவர் - நாடார் இனத்தவர் மற்றும் பண்டாரம் இனத்து மக்கள் இறந்தவர்களை  ரெட்டியார்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமல் சோட்டேப்பா என்பவர் ஆகிரமிப்பு செய்து வழி விடாமல் மறுத்து வருவதாகவும் சுடுகாடு மற்றும் பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை கிராம நிர்வாக அலுவலர் பத்மா நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் ஆகிரமிப்பு அகற்றி தர வேண்டும் என உத்தரவிட்டார்.