செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (11:19 IST)

குளிர்பானத்தில் விஷம் கொடுத்து மாணவர் கொலை: கைதான பெண் மீது குண்டாஸ்?

mother murder
குளிர்பானத்தில் விஷம் கொடுத்து மாணவர் கொலை: கைதான பெண் மீது குண்டாஸ்?
தனது மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவர் ஒருவரை குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பால மணிகண்டன் என்ற மாணவர், மாணவி ஒருவரை விட நன்றாக படித்ததால் அந்த மாணவியின் தாயார் கோபம் அடைந்து பால மணிகண்டனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
இந்த நிலையில் பால மணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை ஜாமீனில் வெளியே விடக்கூடாது என்றும் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது