1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (12:30 IST)

மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ரீத்திக்கு முதலமைச்சர் வாழ்த்து

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழகத்தை சார்ந்த அனுக்ரீத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மும்பையில் மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
 
இந்தப் போட்டியின் இறுதியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். 19 வயதான அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ரீத்திக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் மிஸ் இந்தியாவான அனுக்ரீத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். முதல்வர் அனுக்ரீத்திக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.