நிலவேம்பு போல இதையும் குடிங்க... கபசுர குடிநீருக்கு ஜெயகுமார் ப்ரமோஷன்!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 6 ஏப்ரல் 2020 (12:09 IST)
நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார். 

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
 
இந்நிலையில், கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே கொரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மக்கள் கபசுர குடிநீர் பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
 
அந்த வகையில் அமைச்சர் ஜெயகுமார், நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும், நன்மை தரும் என அதை பருக பரிந்துரை செய்துள்ளார். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். அதேபோல சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :