9 நிமிஷத்துல எங்கு எவ்வளவு மின்சாரம் மிச்சமாச்சு? தேசிய கணக்கீடு இதோ...
நாடு முழுவதும் நேற்று 9 நிமிடத்தில் எவ்வளவு மின் நுகர்வு அளவு குறைந்தது என்று கணக்கிடப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டி நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வரை பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் அதிகமான மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளன.
மின்சார விளக்குகள் நிறுத்தப்பட்டதால் சென்னையில் மட்டும் 350 மெகாவாட் மின்சாரம் மிச்சப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. அதோடு, தமிழகம் முழுவதும் 2200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதோடு, நாட்டின் தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் குறைந்துள்ளது. வடக்கு மண்டலத்தில் 10,413 மெகாவாட், மேற்கு மண்டலத்தில் 8,464 மெகாவாட், கிழக்கு மண்டலத்தில் 6,136 மெகாவாட் அளவுக்கு மின் பயன்பாடு குறைந்தது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கணக்கீட்டு தகவலி வைத்து பார்க்கும் போது வடக்கில் தான் அதிக அளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.