திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (15:56 IST)

பேஸ்புக் நட்பு, சிறுமி 4 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம்: சென்னையில் பயங்கரம்!!

சென்னையில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் 17 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் உள்ள் பெரியமேடு பகுதியில் வசித்து வந்தர அந்த 17 வயது சிறுமி. சிறுமிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார் மோனி. இவரை அவ்வப்போது சந்தித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளார் சிறுமி.
 
இந்நிலையில், அவர்கள் நேரில் சந்தித்த போது எடுத்த வீடியோவை வைத்து, மிரட்டி நான்கு வருடங்களாக அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை காரணம் காட்டி பல லட்ச ரூபாயை மிரட்டி வாங்கியுள்ளார். 
 
இவ்வாறு இருக்கையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ரவீந்தர் என்பவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் மோனி. மேலும், அவருடன் உறவு கொள்ளுமாறு அந்த சிறுமியை வற்புறுத்தியுள்ளார். 
 
இதை தொடர்ந்து ரவீந்தரும் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், இந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து இருவரிடமும் சிறுமி தெரிவித்துள்ளார். 
 
எனவே, கருவை கலைக்க 5 லட்சம் கொண்டு வரும்படி இருவரும் கூறியுள்ளனர். மேலும், ரவீந்தருக்கு ஏற்கனவே திருமணமானவர் என்பதால் சிறுமியை இரண்டாம் தாரமாக கட்டிக்கொள்வதாக கூறியுள்ளார்.
 
மிகவும் தாமதமாக விபரீதத்தை உணர்ந்த சிறுமி, தன் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் மோனி மற்றும் ரவீந்தர் மீது பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குழந்தை பாதுகாப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.