உயர் அதிகாரி மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி
இமாச்சல் பிரதேசத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி மையம் உள்ளது. அதில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் 21 வயது மகள், தன்னை பயிற்சி மையத்தின் கர்னல் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா ராணுவ அதிகாரியை கைது செய்தார். லெப்டினன்ட் மகள் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இருப்பது உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.