கூடுதல் கட்டணம் வசூலித்தால் லைசென்ஸ் ரத்து!? – ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

private buses
Prasanth Karthick| Last Modified வியாழன், 14 அக்டோபர் 2021 (10:39 IST)
தீபாவளியை முன்னிட்டு செயல்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறாக தீபாவளிக்கு சில தினங்கள் முன்னதாக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அரசு பேருந்துகள் மட்டுமல்லாது தனியார் ஆம்னி பேருந்துகளிலும் மக்கள் அதிகம் பேர் முன்பதிவு செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிகமாக பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து எச்சரித்துள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் அவர்களது லைசென்ஸ் ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களை மக்கள் 1800 425 6151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :