1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (11:47 IST)

பொதுமக்கள் எதிர்ப்பு: நீட் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு ஓடிய விஜயபாஸ்கர்!

பொதுமக்கள் எதிர்ப்பு: நீட் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு ஓடிய விஜயபாஸ்கர்!

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


 
 
நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல், ரயில் மறியல், மனிதச்சங்கிலி என போராட்டங்கள் நடத்தினர். இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
 
இந்நிலையில் நேற்று நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான முதல் வகுப்பு துவக்க விழா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது.
 
இந்த துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றிருந்தார். இதனையடுத்து துவக்க விழா நடைபெற இருந்த புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுரியை பொதுமக்கள் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.
 
அவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும், அடுத்தடுத்து பல்வேறு குழுக்கள் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கிளம்பிவிட்டார்.