அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு: கர்நாடகாவில் தொடரும் குழப்பமான சூழல்
கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்த 5 எம்.எல்.ஏ.க்கள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவின் முதலமைச்சர், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசின் 16 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் சபாநாயகர்களால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கில், வரும் 16 ஆம் தேதி வரை எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சபாநாயருக்கு தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்களில் ஆனந்த் சிங், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், முனிரத்னா, ரேஷன் பெய்க் ஆகிய 5 பேர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் குமாரசாமி அரசின் பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது என்பதும், அதே சமயம் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.