செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (07:19 IST)

அமைச்சருடன் டுவிட்டரில் மல்லுக்கட்டிய உதயநிதி

கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தீவிர அரசியலில் குதித்துள்ளார். திமுக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமின்றி அவ்வப்போது தனது டுவிட்டரில் அமைச்சர்களின் ஊழல் குறித்து பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் உதயநிதி கூறிய ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை தெரிவித்து 'களத்தில் இறங்குங்கள் தம்பி, அப்போது தெரியும்' என்று கூறியிருந்தார்

இந்த கருத்துக்கு பதிலளித்த உதயநிதி, 'நான் எப்பவுமே களத்துல தான் இருக்கேன் வேலுமணிண்ணே. உங்கள் ஊழல் குளம் கோவையில இருப்பதற்கான ஆதாரத்தை போட்டோவா போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன்னுதாரணமாக கொண்டு வந்தவர் நீங்கள்! விரைவில், நீதிமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லத் தயாராக இருங்கள்!” என்று தெரிவித்திருந்தார். மேலும், ஆதாரத்தையும் புகைப்படத்துடன் வெளியிட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் டுவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், “என் வேலையைப் பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதும் வரவேற்கிறேன். ஆனால் நீங்கள் பேசியிருப்பதும், பதிவிட்டிருப்பதும் அப்பட்டமான பொய்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சர் வேலுமணியும் உதயநிதியும் டுவிட்டரில் மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.