அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சேம்பியனாக மாற்றி வருகிறார் - முதல்வர் முக.ஸ்டாலின்
''உலகின் கவனத்தை சென்னையில் நடைபெற்ற இந்த உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஈர்த்தது என்று முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டி - 2023 நிறைவு விழாவில், சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் முதல் இடம் வென்ற எகிப்து அணிக்கு தங்க கோப்பையும், இரண்டாம் இடம் வென்ற மலேசியா அணிக்கு வெள்ளி கோப்பையும், மூன்றாம் இடத்தை வென்ற இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு வெண்கல கோப்பையும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
இந் நிலையில் ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: அரசின் உதவியால் உலக ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடைபெற்றுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சேம்பியனாக மாற்றி வருகிறார். சர்வதேச குழுவின் இடம்பெற்றுள்ள 4 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர் என்று தெரிவித்தார்.
மேலும், கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது. உலகின் கவனத்தை, சென்னையில் நடைபெற்ற இந்த உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஈர்த்தது என்று தெரிவித்துள்ளார்.