1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (12:16 IST)

வைரஸ் காய்ச்சலால் ஒரே மகன் உயிரிழப்பு.. பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

வைரஸ் காய்ச்சலால் ஒரே மகன் உயிரிழந்ததை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி-வக்தசலா தம்பதியருக்கு ஏழு வயது மகன் இருந்தார். சமீபத்தில், வைரஸ் காய்ச்சல் காரணமாக மகன் பலியான நிலையில், அவரது மறைவுக்குப் பின்னர் பெற்றோர் மன உளைச்சலில் இருந்தனர். 
 
இதன் தொடர்ச்சியாக, கோவையில் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து, அந்த ரூமில் விஷம் குடித்து பழனிசாமி-வக்தசலா தம்பதி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அறிந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
பழனிசாமி-வக்தசலா தற்கொலை குறித்து அவரது சகோதரர் முருகனுடன் பேசியபோது, பழனிசாமிக்கு ஏழு வயது மகன் இருந்ததாகவும், வைரஸ் காய்ச்சலால் மகன் இறந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 
Edited by Mahendran