வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:38 IST)

பட்டாசு மீது உட்கார்ந்தால் ஆட்டோ பரிசு! பரிதாபமாய் பறிபோன உயிர்! - அதிர்ச்சியளிக்கும் CCTV Video!

Cracker Burst

பெங்களூரில் பட்டாசு மீது அமர்ந்தால் ஆட்டோ வாங்கி தருவதாக நண்பர்கள் கூறியதை நம்பி, பட்டாசில் அமர்ந்த நபர் பரிதாபமாய் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள கோனனாகுண்டே பகுதியை சேர்ந்தவர் 32 வயதான சபரிஷ். இவர் தீபாவளி அன்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களிடையே ஒரு போட்டி எழுந்த நிலையில், வெடிக்கும் பட்டாசு மீது அமர்ந்தால் ஆட்டோ வாங்கி தருவதாக நண்பர்கள் சபரிஷ்க்கு சவால் விட்டுள்ளனர்.

 

சவாலை ஏற்ற சபரிஷ் ஒரு பெரிய வெடி மீது அமர்ந்திருக்க அவரது நண்பர்கள் அந்த வெடியை கொளுத்தினர். வெடி வெடித்து சிதறிய சிறிது நேரத்தில் மயக்கமடைந்து சரிந்த சபரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 
 

 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சபரிஷ் பட்டாசு மீது அமர்வதும், நண்பர்களே அதற்கு தீ வைப்பதுமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.