1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 30 மார்ச் 2024 (20:24 IST)

வரி செலுத்த மறுப்பவர்கள்... காங்கிரஸை சாடிய அசாம் முதல்வர்

Assam CM  Himanta Biswa Sarma
அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில்  அரசிற்கு வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சி கடந்த 2017- 2018    நிதியாண்டு முதல் 2020-2021 ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை. என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக சுமார் ரூ.1800 கோடி செலுத்த வேண்டும் என அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைத் திவாலாக  பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ்  கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே  பாஜக அரசின் வரி பயங்கரவாதத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா,அரசிற்கு வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
அரசிற்கு வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள், வரிப்பணம் என்பது பொது மக்களின் நலனுக்காகச் செலவிடப்படுகிறது. வரி செலுத்த காங்கிரஸ் மறுக்கிறது என்றால், அவர்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.