புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (07:22 IST)

சிமெண்ட் விலையை குறைக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

கடந்த சில வாரங்களாக குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து சிமெண்ட் விலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கட்டிடம் கட்டும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் 
 
இந்த நிலையில் சிமெண்ட் விலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி கூறியுள்ளார் 
 
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய போது சிமெண்ட் விலையை குறைக்க சிமெண்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து பேசிஉள்ளதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமெண்ட் விலை குறைப்பு நடவடிக்கையை உற்பத்தியாளர்கள் முன்வராவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.