செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (10:25 IST)

திருக்குறளுடன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Thangam Thennarasu
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவித்த நிலையில் சற்றுமுன் அவர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி உள்ளார். 
 
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
 
என்ற திருக்குறளை கூறி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தன்னரசு தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருக்குறளுக்கு குடிமக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் கடுமையான சொற்களை கூறாமல் ஆட்சி புரிந்து வரும் அரசனை உலகமே போற்றும் என்றும் அதேபோல் கடைகோடி மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றும் அவர் முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 
 
இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் உரையில் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க இரண்டு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார் 
 
மேலும்  2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்என்றும், கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்,
 
Edited by Mahendran