வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:45 IST)

கர்நாடக பட்ஜெட்டில் மேகதாதுவில் அணை.. முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பால் பரபரப்பு..!

கர்நாடக முதலமைச்சரும் நிதி அமைச்சருமான  சித்தராமையா இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் மேகதாது அணை கட்டுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே மேகதாது அணை குறித்த விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் இன்றைய பட்ஜெட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மேகதாது அணை கட்டுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் மேகதாது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும் - கர்நாடக மாநில பட்ஜெட்டில் உறுதி

கர்நாடக மாநிலத்தின் கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டு அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும் என்றும், அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா  தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran