1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (08:42 IST)

அண்ணாமலையின் cheap விளம்பரம்: பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

செயற்கையாக மின்பற்றாக்குறை என அண்ணாமலையின் விமர்சித்ததற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த சில காலமாக தொடர் மின்வெட்டு அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய மின்சாரம் வழங்கப்படாததே மின் தடைக்கு காரணம் என தெரிவித்திருந்தார்.
 
அண்ணாமலை விமர்சனம்: 
செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் குறிப்பிட்டதாவது, செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017 இருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 
செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.
 
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி: 
அண்ணாமலையின் விமர்சனத்திற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் இந்த ஆண்டில் 29.3.2022 வரை 17,196 மெகா வாட் மின் தேவை ஏற்பட்டது. அதை முழுவதும் பூர்த்தி செய்தோம். ஏப்ரல் மற்றும் மே மாதத்தை சமாளிக்கவும் தேவைக்கு ஏற்ப கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு அதையும் விநியோகம் செய்தோம்.
நாளை முதல் சீரான மின்விநியோகம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜக தரப்பில் மாநில தலைவர் அண்ணாமலை மலிவான விளம்பரத்துக்காக, மக்கள் மத்தியில் தவறான கருத்தை எடுத்துக் கூறியிருக்கிறார்.
 
ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: 
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.