புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (18:27 IST)

பஞ்ச பரதேசி மாதிரி வந்திருக்க... மிஸ்டர் செல்லூர் ராஜூ மக்களை இப்படியா பேசுவது?

பஞ்சை பராரியாக  மனு கொடுக்க வந்த உங்களை பார்க்கும்போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ மக்களை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம், மதுரை வடக்கு தொகுதி சார்பில் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது, உங்களை பார்க்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது. பஞ்சையாய், பராரியாய் தலையில் எண்ணெய் இல்லாமல் கூட, மாவட்ட கலெக்டரை பார்த்து மனு கொடுக்க வந்திருக்கிறீர்கள்.
 
ஆண்களை விட பெண்கள் தான்  இங்கே அதிகளவில் மனு கொடுக்க வந்திருக்கிறீர்கள். ஆண்களை விட பெண்களுக்கு தான் ஒன்றரை மடங்கு சக்தி அதிகம். ஆனால் பெண்கள் அதனை வெளியே காட்டி கொள்ள  மாட்டார்கள். நடைபெறவுள்ள  உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு பெண்கள் போட்டியிடலாம் என்று பேசினார்.