கோடிக்கணக்கில் திடீரென கொட்டிய பணம்: சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி

Last Modified வியாழன், 21 நவம்பர் 2019 (09:21 IST)
கொல்கத்தாவில் உள்ள பிசியான சாலை ஒன்றில் திடீரென கோடிக்கணக்கில் பணம் கொட்டியதால் அந்த சாலையில் சென்ற பாதசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்
கொல்கத்தாவில் உள்ள பெனடிக்ட் என்ற தெருவில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் வரி முறைகேடு நடப்பதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனை செய்தனர்.

வருமான வரித்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும்போதே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பதுக்கி வைத்திருந்த பணத்தை வீசியெறிந்ததாகவும், பண்டல் பண்டலாக வீசப்பட்ட இந்த பணத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
சாலையில் விழுந்த பணத்தை பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு எடுத்து கொண்டு மாயமாக மறைந்துவிட்டதால் தனியார் நிறுவனத்தினர் வீசிய பணம் எவ்வளவு என்பதை வருமான வரித்துறையினர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கோடிக்கணக்கான பணம் திடீரென சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பாக இருந்தது


இதில் மேலும் படிக்கவும் :