செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (07:54 IST)

மீட்டிங்கில் கதறி அழுத அமைச்சர் செல்லூர் ராஜு: என்ன காரணம்?

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அமைச்சர் செல்லூர் ராஜு கண்கலங்கியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
 
மதுரை கரிமேட்டில் அ.தி.மு.க இளைஞரணி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ் அவர்களின் அம்மா, எலிசபெத் ஜெயசீலி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு பங்குபெற்று ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
அப்போது பேசிய அமைச்சர், அம்மாவை பிரிந்து வாடும் கிரம்மர் சுரேஷின் வலிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் என் தாயையையும், மகனையும் இழந்து தவிக்கிறேன். தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். என் மகன் தமிழ்மணி ஒரு விபத்தில் இறந்து விட்டார் என கூறிக்கொண்டிருக்கும் போதே அமைச்சர் கண்கலங்கினார்.
 
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அமைச்சரை ஆசுவாசப்படுத்தினார்கள். ஏழை எளிய மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டுமென கூறிவிட்டு அமைச்சர் அங்கிருந்து சென்றார்.