மத்திய அமைச்சரின் பேட்டியின்போது நாக்கை நீட்டி குறும்பு செய்த சிறுமி!
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று இடைக்கால நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இன்னும் மூன்று மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து இந்த பட்ஜெட்டில் சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்ற அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்கள் பாராட்டி அறிக்கைகளையும் பேட்டியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே பட்ஜெட் குறித்து பேட்டி அளித்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்ற சிறுமி ஒருவர் குறும்பாக நாக்கை நீட்டி செய்த காட்சி தற்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது
அந்த சிறுமி தற்செயலாக நாட்டை நீட்டினாரா? அல்லது மத்திய அமைச்சரை கிண்டல் செய்வதற்காக அவ்வாறு செய்தாரா? என்பது குறித்து நெட்டிசன்களிடையே விவாதங்கள் நடந்து வருகிறது.